< Back
மாநில செய்திகள்
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா  வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
16 Feb 2023 12:15 AM IST

மல்லப்பாடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பர்கூர்

பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் மல்லப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகரை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சரோஜினி 6 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் சம்சுதீன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலன், துணைத்தலைவர் ஜெகதீசன், ஊராட்சி செயலாளர் சசி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்