கிருஷ்ணகிரி
81 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
|ஜெகதேவியில் 81 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை அமைச்சர் காந்தி வழங்கினார்.
பர்கூர்:
பர்கூர் அருகே ஜெகதேவி ஊராட்சியில் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு 81 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற 1½ ஆண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த 81 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிற மாநில முதல்-அமைச்சர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தாசில்தார் பன்னீர்செல்வி, துணை தாசில்தார் பத்மா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.