< Back
மாநில செய்திகள்
வரமிளகாய், மல்லி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வரமிளகாய், மல்லி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

தினத்தந்தி
|
3 Dec 2022 11:31 PM IST

வரமிளகாய், மல்லி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும் தற்சமயம் தான் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆந்திராவில் இருந்து வரமிளகாய் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.150-க்கு விற்பனையான வரமிளகாய் தற்போது ரூ.320-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கிலோ ரூ.160-க்கு விற்பனையான மல்லி தற்போது கிலோ ரூ.250 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள்.

விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக வியாபாரிகள் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விலையேற்றத்தை கட்டுப்படுத்த வரமிளகாய், மல்லியை கூட்டுறவு சங்கம் மூலமாக ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்