< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வீட்டிற்குள் புகுந்து 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு
|3 Aug 2022 11:50 PM IST
வீட்டிற்குள் புகுந்து 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு நடந்துள்ளது.
கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 48). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அலமாரியில் ைவத்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.