< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
ரப்பர் மரம் விழுந்து வீடு சேதம்
|16 Sept 2023 12:15 AM IST
அருமனை அருகே காற்றுடன் கனமழை, ரப்பர் மரம் விழுந்து வீடு சேதம்
அருமனை,
அருமனை அருகே உள்ள முக்கூட்டுகல் பகுதியில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த நிலையில் விஜயகுமார் என்பவரின் வீட்டின் அருகில் நின்ற ரப்பர் மரம் காற்றில் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் கூரை கடுமையாக சேதம் அடைந்தது. மரம் விழுந்த போது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.