< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
வீடு புகுந்து நகை திருட்டு
|18 Jun 2023 12:15 AM IST
வீடு புகுந்து நகை திருடப்பட்டது.
விக்கிரவாண்டி தாலுகா வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பிரகாஷ் மனைவி சிவசக்தி (வயது 25). இவர் நேற்று முன்தினம் காலை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிக்கு சென்று விட்டார். அவருடைய மாமனார் சாமிநாதன் (60) மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் வேலை முடிந்ததும் சிவசக்தி தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.