< Back
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து ரூ.1½ லட்சம் பணம் திருட்டு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து ரூ.1½ லட்சம் பணம் திருட்டு

தினத்தந்தி
|
6 Aug 2023 4:57 PM IST

கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சத்தை திருடி சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயி வீட்டில்

கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி (வயது 70). இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று முன்தினம் இரவு, தனது வீட்டை வெளிபுறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு அருகில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கேயே வீட்டின் வெளியே காற்றோட்டமாக கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் மாசிலாமணி வீட்டில் ஆட்கள் சத்தம் கேட்டது. உடனே கண்விழித்த மாசிலாமணி வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என எழுந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியே தப்பி ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.1½ லட்சம்

இதனையடுத்து அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1½ லட்சத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயி வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சம் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்