பெரம்பலூர்
ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
|ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் ஜெயச்சந்திரன் (வயது 32). இவருக்கு சவுமியா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஜெயச்சந்திரன் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். குழந்தை இல்லாததால் ஜெயச்சந்திரன் கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை வீட்டில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு ஜெயச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஜெயச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.