< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில்விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
|21 March 2023 12:30 AM IST
ஓசூர்:
ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பு ஏற்பாட்டில் கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை, பூ கட்டுவோர் பேரவை ஆகியவற்றின் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட தலைவர் கங்காதரன், கோட்ட தலைவர் மஞ்சுசாமி, மாவட்ட செயலாளர் நரசிம்மன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக ஜவளகிரி ஆசிரம தலைவர் ரத்தினகுமார் சுவாமிகள், பூசாரி பேரவை செயலாளர் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கிராம பூசாரிகள் அனைவருக்கும் நிபந்தனைகள் இன்றி மாத ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் வெங்கடேஷ், உதயகுமார், சசி, சத்திய பிரசாத், பிரவீன்குமார், சின்னா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.