< Back
மாநில செய்திகள்
ஓசூரில்எரி வேளாண் அறிவியல் திருவிழா
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்எரி வேளாண் அறிவியல் திருவிழா

தினத்தந்தி
|
2 Feb 2023 12:15 AM IST

ஓசூர்:

ஓசூரில் மத்திய பட்டு வாரியம் சார்பில் எரி வேளாண் அறிவியல் திருவிழா தளி சாலையில் உள்ள மத்திய எரிபட்டுப்புழு விதை உற்பத்தி மையத்தில் நடந்தது. விழாவிற்கு பட்டு வளர்ச்சி துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் பிரதீஷ் குமார் வரவேற்றார். சேலம் மண்டல பட்டு வளர்ச்சி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி டாக்டர் தாஹிரா பீவி கலந்து கொண்டு பேசினார்.

இதனை தொடர்ந்து அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் ஸ்ரீதரன், மேட்டுபாளையம் பாரஸ்ட் கல்லூரியின் பட்டு வளர்ச்சி துறை தலைவர் மணிமேகலை, ஓசூர் அரசு கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், விஞ்ஞானி ஜான்சி லட்சுமி, ஓசூர் பட்டு வளர்ச்சி பயிற்சி நிலைய முதல்வர் பாபு ஆகியோர் பேசினர். இதில் 350-க்கும் மேற்பட்ட எரிபட்டு விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி எரிபட்டு தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது. முடிவில் பட்டு வளர்ச்சி துறை விஞ்ஞானி புனிதவதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்