< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில் தறிகெட்டு ஓடி சாலையில் நின்ற சரக்கு வேன்
|23 Sept 2022 12:15 AM IST
ஓசூரில் தறிகெட்டு ஓடி சாலையில் நின்ற சரக்கு வேன்
ஓசூர்:
பெங்களூருவில் இருந்து நேற்று ஓசூர் நோக்கி ஒரு சரக்கு வேன் வந்தது. ஓசூர் சிப்காட் சோதனைச்சாவடி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்றவர்கள் மீது மோதுவதுபோல் சென்று சாலை நடுவே நின்றது. இதையடுத்து வேனை நிறுத்திவிட்டு டிரைவர் கீழே இறங்கினார். அவர் மது போதையில் சரக்கு வேனை ஓட்டிவந்ததாக தெரிகிறது. மேலும் தறிகெட்டு வந்ததால் வேனின் முன்புறம் சேதமடைந்தது. இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.