கிருஷ்ணகிரி
ஓசூரில் தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி
|ஓசூரில் தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஓசூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் வரவேற்றார். ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு, கிருஷ்ணன், அசோக்குமார், வேணு, முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை செய்தி தொடர்பு செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு என்ற தலைப்பிலும், தலைமை செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி மாநில சுயாட்சி என்ற தலைப்பிலும் பேசினர். இதில் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், திம்மராஜ் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.