நாமக்கல்
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் விடுதிநாள் விழா துணைவேந்தர் பங்கேற்பு
|நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் விடுதிநாள் விழா துணைவேந்தர் பங்கேற்பு
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி மற்றும் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்லூரி ஆண்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், கால்நடை மருத்துவ படிப்பின் சிறப்புகளையும், கால்நடை மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும் எடுத்து கூறினார். மேலும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர். என். நடராஜன், கல்லூரி முதல்வர் செல்வராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கல்லூரியின் விடுதிக்காப்பாளர் தர்மசீலன் விடுதி ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர் மன்றத் துணைத்தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்று பேசினார். முடிவில் மகிந்தன் நன்றி கூறினார்.
இதேபோல் கல்லூரியின் வளாகத்தில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.