< Back
மாநில செய்திகள்
நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்  ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி  காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தினத்தந்தி
|
1 Aug 2022 11:33 PM IST

நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாமக்கல் அருகே உள்ள கீரம்பூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற் பயிற்சி நிலையத்திற்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 100 பயிற்சியாளர்கள் தங்கும் வகையில் 25 அறைகளுடன் புதிய மாணவர் விடுதி கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையொட்டி கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார். இதி்ல் பயிற்சி நிலைய முதல்வர் கேசவன், மேலாளர் மனோன்மணி, ராசாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்