< Back
மாநில செய்திகள்
ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

தினத்தந்தி
|
24 July 2023 12:15 AM IST

கடலூர் அருகே ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை

கடலூர்

கடலூர் அருகே திருமாணிக்குழி மாவட்டிப்பாளையம் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடை மகன் சரத்குமார் (வயது 21). டிப்ளமோ டெக்னீஷியன் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த 1 மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் மருந்து, மாத்திரை சாப்பிட்டும் நோய் சரியாகவில்லை.

இதனால் மனமுடைந்த சரத்குமார் நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவரது தந்தை பாவாடை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்