புதுக்கோட்டை
செண்பக சாத்தையனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா
|செண்பக சாத்தையனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது.
செண்பக சாத்தையனார் கோவில்
அரிமளம் ஒன்றியம் கீழாநிலைகோட்டை அருகேயுள்ள நல்லம்பாள் சமுத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செண்பக சாத்தையனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பூரணிப்பட்டி, கோவில்பட்டி, மாவடிப்பட்டி கிராம மக்களால் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி குதிரை எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி 3 கிராம மக்கள் குயவர்பட்டிக்கு சென்றனர். பின்னர் அங்கு சாமி அழைக்கப்பட்டு அருள்வாக்கு கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மண்ணால் ஆன 25-க்கும் மேற்பட்ட குதிரைகளை 3 கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து நல்லம்பாள் சமுத்திரம் கிராமத்தில் உள்ள குதிரை திடலை வந்தடைந்தனர். அதன் பின்னர் செண்பக சாத்தையனாருக்கு பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பஞ்சமுக தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
வள்ளி திருமணம்
இதையடுத்து, கோவிலில் இருந்து 3 கிராம மக்கள் மற்றும் பக்தர்கள், அம்பலக்காரர்கள், இளைஞர்கள் தட்டு எடுத்து சென்றனர். பின்னர் சாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் குதிரைகளை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து செண்பக சாத்தையனார் கோவிலை வந்தடைந்தனர். அதில் ஒரு குதிரை மட்டும் சீதனக் குதிரையாக கண்ணுடைய அய்யனார் கோவிலை சென்றடைந்தது. மாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நம்பூரணிபட்டி, கோவில்பட்டி, மாவடிப்பட்டி ஊரார்கள் கோட்டிசேர்வை, வெள்ளிச்சேர்வை, குதிரை வெட்டி அம்பலம், வெள்ளி மாசப்பன் அம்பலம் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.