< Back
மாநில செய்திகள்
குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

தினத்தந்தி
|
16 July 2022 7:24 PM GMT

அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

அறந்தாங்கி அருகே இடையார் குருந்துடைய அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சந்தனக்காப்பு திருவிழாவை முன்னிட்டு 41-ம் ஆண்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரியமாட்டிற்கு போகவர 8 மைல் தொலைவும், நடுமாட்டிற்கு 6 மைல் தொலைவும், குதிரை வண்டிக்கு 8 மைல் தொலைவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பந்தயத்தில் தஞ்சை, புதுக்கோட்டை ஈரோடு, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாடு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

பரிசு

பந்தயத்தில் குதிரை, மாட்டு வண்டிகள் பந்தய இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதைதொடர்ந்து குதிரை, மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசும், வெற்றிகோப்பைகளும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இடையார் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்