சிவகங்கை
கோவில் திருவிழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
|கோவில் திருவிழாவையொட்டி குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
காரைக்குடி,
சிவகங்கை அருகே கூத்தாண்டன் கிராமத்தில் குருந்தாருடைய அய்யனார், விளக்காருடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவையொட்டி மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. கூத்தாண்டன்-இளையான்குடி சாலையில் நடந்த இந்த போட்டியில் மொத்தம் 35 வண்டிகள் கலந்துகொண்டன. முதலில் பெரியமாடு வண்டி பந்தயமும், அடுத்து சின்னமாடு பந்தயம், குதிரை வண்டி பந்தயம் நடந்தது. அதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் காரைக்குடி கழனிவாசல் ஐயுளி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் கழனிவாசல்-சூரக்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 123 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாடு வண்டி பந்தயம், நடுமாடு வண்டி பந்தயம், சின்னமாடு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.