< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம் அருகே கோர விபத்து - 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
மாநில செய்திகள்

காஞ்சிபுரம் அருகே கோர விபத்து - 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி

தினத்தந்தி
|
4 Jun 2023 1:05 AM IST

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே சித்தேரி மேடு பகுதியில் சரக்கு லாரி மீது கார் மோதி கோர விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். சித்தேரி மேடு பகுதியில் பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது கார் மோதியதால் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.

காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜேஷ், ரத்னா மற்றும் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செ.நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்த ராமஜெயம் என்பவர் படுகாயத்துடன் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்