< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
போரில் உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பத்தினர் கவுரவிப்பு
|23 July 2022 1:10 AM IST
போரில் உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
மத்திய அரசு போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பதக்கமும், பரிசு பொருளும் வழங்குகிறது. அந்த வகையில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் போரின்போது உயிர்நீத்த இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சீனிவாசன், முத்தையா, வெங்கடசாமி, சுப்பையன், ஜெயராமன், தாமோதர கண்ணன் மற்றும் ஹரி கோபால் ஆகியோரின் குடும்பத்தினரை விருதுநகர் என்.சி.சி. பட்டாலியன் அதிகாரிகள் அழைத்து அவர்களுக்கு பதக்கமும், பரிசு பொருளும் வழங்கி கவுரவித்தனர். என்.சி.சி. பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் கர்னல்ஆறுமுகம் பரிசு பொருளையும், பதக்கத்தையும் வழங்கி அவர்களை கவுரவித்தார். இதில் என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.