< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்
|29 Jan 2023 12:41 AM IST
கவுரவ விரிவுரையாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள், அதன் கூட்டமைப்பு சார்பில் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து கல்லூரியில் பணிபுரிந்தனர். பின்னர் அவர்கள் மதியம் செல்போனில் சமூக வலைத்தளமான டுவிட்டர் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.