< Back
மாநில செய்திகள்
இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

தினத்தந்தி
|
11 Sep 2022 4:20 PM GMT

முகையூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி ஒதியத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன், துணை அமைப்பாளரும், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராயல் எஸ்.அன்பு, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகராட்சி தலைவருமான டி.என்.முருகன் கட்சி நிர்வாகிகளிடம் படிவத்தை வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவை தலைவர் காத்தவராயன், துணை செயலாளர்கள் லூயிஸ், முருகையன், நிர்வாகிகள் அருணாச்சலம், சகாயநாதன், உதயசூரியன், திருக்கோவிலூர் நகர தி.மு.க. அவைத் தலைவர் குணா, துணை செயலாளர் சக்திவேல், தொ.மு‌.ச. நிர்வாகி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்