< Back
மாநில செய்திகள்
வீட்டுத்தோட்ட செடிகள் விற்பனை கண்காட்சி
தேனி
மாநில செய்திகள்

வீட்டுத்தோட்ட செடிகள் விற்பனை கண்காட்சி

தினத்தந்தி
|
24 Jun 2023 12:30 AM IST

வீட்டுத்தோட்ட செடிகள் விற்பனை கண்காட்சி தேனி என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நேற்று தொடங்கியது

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், வீட்டுத்தோட்ட செடிகள் விற்பனை கண்காட்சி தேனி என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடக்க விழாவின் போது, அரசு மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் 9 பேருக்கு மூலிகை செடிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த முகாமில் காய்கறி, பழங்கள் தொடர்பான செடிகள், மரக்கன்றுகள், விதைகள், உரம் மற்றும் விவசாயி தொழில் முனைவோர்களின் உற்பத்தி பொருட்கள் ஆகியவை கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள செடிகள், மரக்கன்றுகளின் விலை அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வத்துடன் வந்த மக்கள் பலரும் அதன் விலையை பார்த்துவிட்டு வாங்க தயங்கினர். இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. தொடக்க விழாவில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்