< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
2 Oct 2023 12:30 AM IST

கோவில்பட்டியில் வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜேஸ் மனைவி மகேஷ்வரி (வயது 39). இவருக்கும் வீட்டின் அருகே குடியிருந்து வரும் வாசுகிசெல்விக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மகேஷ்வரி அவரது தாய் தனலட்சுமியுடன் வீட்டில் இருந்தார். அப்போது வாசுகிசெல்வி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகேஷ்வரியை அவதூறாக பேசி தாக்கியதாகவும், இதை தடுக்க வந்த தனலட்சுமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகி செல்வியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்