< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து 27 பவுன் நகைகள் திருட்டு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

வீடு புகுந்து 27 பவுன் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
21 Oct 2023 2:00 AM IST

செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகைகள் திருட்டு

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி சுவேதா அம்பிகை(வயது 22). இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அலமாரி திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 27 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது. யாரோ மர்ம ஆசாமி வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு, கதவை உடைத்து உள்ளே புகுந்து, அலமாரியில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

விசாரணை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுவேதா அம்பிகை, செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், அலமாரியின் சாவியை சுவேதா அம்பிகை வைக்கும் இடத்தை அவருக்கு தெரிந்த நபர் யாரோதான் அறிந்து வைத்திருந்து உள்ளனர். அதை எடுத்துதான் இந்த திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு இருப்பார்கள் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீசார் அந்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்