கரூர்
வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி
|கரூரில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
கரூர் பஸ் நிலையம் எதிரே கவுரிபுரம் பகுதியில் உள்ள சரஸ்வதி வெங்கட்ராமன் மகாலில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி கடந்த 28-ந்ேததியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், வீட்டு உபயோக பொருட்களான கட்டில், மெத்தை, தலையணைகள், ஷோபா, டைனிங் டேபிள், டி.வி., வாசிங் மிசின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் 50 சதவீத தள்ளுபடியுடன் விற்பனைக்கு உள்ளது.
ேமலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. கண்காட்சியில் குழந்தைகள் விளையாடும், மகிழும் வகையில் ராட்டினம், டிராகன் வாட்டர் ரோலர், வாட்டர் போட்டிங், 3டி ஷோ உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. முதன் முறையாக ஜப்பான் தொழில்நுட்பத்தில் உருவான ஹாலோ கிராம் கண்காட்சியும் இடம் பெற்று உள்ளது. மேலும் நேற்று கண்காட்சியை காமெடி நடிகர் ராமர் பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இந்த கண்காட்சி இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.