< Back
மாநில செய்திகள்
காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை

தினத்தந்தி
|
17 July 2023 12:15 AM IST

சாயல்குடியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சாயல்குடி,

சாயல்குடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த காமராஜர் பிறந்த தின நிகழ்ச்சிக்கு சாயல்குடி காங்கிரஸ் நகர தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயராஜ், சாயல்குடி நகர் இளைஞர் அணி தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி கட்சி கொடியை ஏற்றி காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் முனியசாமி, நகர் பொதுச்செயலாளர் அந்தோணிச்சாமி, வார்டு தலைவர்கள் ராமச்சந்திரன், அந்தோணி ராஜ், நகர் வர்த்தக அணி தலைவர் இக்பால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதே போல் கனிராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின நிகழ்ச்சிக்கு முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார்.. மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தேவேந்திரன் ரமேஷ் பாபு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் மகிண்டி அழகு கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் உத்திரலிங்கம், ஹமீது, சாயல்குடி நகர் காங்கிரஸ் தலைவர் காமராஜ் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், கன்னிராஜபுரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் லட்சுமணன், வீரபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்