< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு காவிரியில் இருந்து தங்கக்குடத்தில் புனிதநீர்
|18 Nov 2022 1:48 AM IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு காவிரியில் இருந்து தங்கக்குடத்தில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
ஸ்ரீரங்கம்:
ஐப்பசி மாதம் (துலா மாதம்) முழுவதும் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்கக்குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று துலா மாத நிறைவு, கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் முடவன் முழுக்கு நாளையொட்டி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.