< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
புனித குழந்தை தெரசாள் ஆலய தேர் பவனி
|2 Oct 2023 12:15 AM IST
புனித குழந்தை தெரசாள் ஆலய தேர் பவனி நடந்தது
மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆலய திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் 10-ம் நாள் மின் அலங்கார தேர் பவனி, நற்கருணை பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழாவை முன்னிட்டு ஆலயம் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நடந்தது. ஆலயத்தில் தொடங்கிய பவனி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
பின்னர் ஆலய பங்குத்தந்தை பாஸ்டின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவில் பங்கு இறை மக்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான நற்கருணை பெருவிழா நடைபெற்றது.