< Back
மாநில செய்திகள்
புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி

தினத்தந்தி
|
15 Aug 2023 1:28 AM IST

புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி

கும்பகோணம் புனித அலங்கார அன்னை பேராலய தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புனித அலங்கார அன்னை பேராலயம்

கும்பகோணம் காமராஜர் ரோட்டில் 348 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இங்கு கடந்த 6-ந்தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும், பல்வேறு தலைப்புகளில் அருட்தந்தையர்களால் மறையுரையும் நடைபெற்றது.

தேர்பவனி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் ஆயர் மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு புனித அலங்கார அன்னை ஆடம்பர தேர்பவனியை ஆயர் பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேராலயத்தை வந்தடைந்தது.

கொடியிறக்கம்

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சுதந்திர தினவிழா மற்றும் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்க நிகழ்ச்சியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அலங்கார அன்னை பேராலய பங்குத்தந்தை பிலோமின்தாஸ், உதவி பங்குத்தந்தை எட்மண்ட் லூயிஸ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பிரண்ட்ஸ் ஆப் ஜீசஸ் இளையோர் அணி, மகளிர் அணி, வின்சென்ட்தேபவுல் சபைகள், மரியாயியின் சேனை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்