< Back
மாநில செய்திகள்
விடுமுறை தினம்; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
மாநில செய்திகள்

விடுமுறை தினம்; கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

தினத்தந்தி
|
6 Aug 2023 9:31 AM IST

இன்று விடுமுறை நாளை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

கொடைக்கானல்,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளதன் காரணமாக பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக குளு குளு சுற்றுலாத்தலங்களை தேடிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று விடுமுறை நாளை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று மேயர் சதுக்கம், பைன் மரச்சோலைப் பகுதி, குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, படகுக்குழாம் போன்ற பகுதிகளில் அதிகமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நட்சத்திர ஏரியில் அதிகமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். கொடைக்கானலில் தற்போது இதமான பருவநிலை உள்ள சூழலில் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கொடைக்கானலுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக சிறு, குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்