< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள்
|25 Dec 2023 3:19 AM IST
கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்தில் திரண்டனர்.
மாமல்லபுரம்,
கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மாமல்லபுரத்தில் திரண்டனர். கடற்கரை கோவில், ஐந்தரதம், அர்ச்சுனன் தபசு, பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்த செவ்வாடை பக்தர்களும் மாமல்லபுரத்தில் குவிந்தனர். கடற்கரையில் குவிந்த பயணிகளில் பலர் அலையின் அழகை கண்டு ரசித்து கடலில் குளித்து மகிழ்ந்தனர். பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. பயணிகள் வருகையால் கடற்கரை சாலையில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது.