தொடர் விடுமுறை: தென்மாவட்டங்களுக்கு விரையும் மக்கள் - கடும் போக்குவரத்து நெரிசல்
|சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
நாளை சுதந்திர தின விடுமுறை மற்றும் அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர். பேருந்துகள் மட்டுமின்றி, சொந்த கார்கள் மற்றும் இருசக்க வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.
இதன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆமை வேகத்தில் வாகனங்களால் ஊர்ந்து செல்வதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.