< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்வு
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை: ஆம்னி பஸ்களில் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்வு

தினத்தந்தி
|
11 Aug 2023 7:42 AM GMT

தொடர் விடுமுறை காரணமாக தனியார் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணங்கள் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பஸ்களின் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. சிறப்பு பஸ்களையும் தமிழக அரசு இயக்குகிறது . பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.

சென்னை - கன்னியாகுமரி ஏசி பஸ் ரூ.3,000, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை - நெல்லை ஏசி பஸ் ரூ.2,450, சாதாரண பஸ் ரூ.1,400, சென்னை - மதுரை ஏசி பஸ் ரூ 2,000, சாதாரண பஸ் ரூ. 1,200 வரை என டிக்கெட் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்