< Back
மாநில செய்திகள்
விடுமுறை தினம்: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!
மாநில செய்திகள்

விடுமுறை தினம்: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!

தினத்தந்தி
|
7 May 2023 11:44 AM IST

விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று ஏராளமானோர் காசிமேட்டில் மீன்களை வாங்க குவிந்தனர்.

திருவொற்றியூர்,

மீன்பிடித்தடை காலம் என்றாலும் விடுமுறை தினமான இன்று காசிமேட்டில் திருவிழா போன்று கூட்டம் களை கட்டி உள்ளது

கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கிய மீன்பிடித்தடை காலத்தால் பெரிய விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிறிய பைபர் படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து விற்பனை செய்யப்படுவதால் குறைந்த அளவு மீன் வரத்து காணப்படுகின்றன. வகை வகையான பெரிய வகை மீன்கள் வரத்து இல்லாததால் சிறிய வகை மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

பெரிய வகை வஞ்சிரம், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள், தூண்டில் மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருந்தபோதிலும் அதிக வரத்து இல்லாததால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

சாதாரண நாட்களில் 400 ரூபாய் 600 ரூபாய் விற்பனை செய்யப்படும் மீன்கள் கூட இன்று ஆயிரம் ரூபாய் வர விற்பனை செய்யப்படுகின்றன. பெரிய வகை மீன்கள் விற்பனை செய்யும் ஏலகூடத்தில் மீன் விற்பனை இல்லாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன

வஞ்சிரம் ரூ. 1200 முதல் ரூ. 2000 வரையிலும், ரூ. சங்கரா 500, கொடுவா ரூ. 600, பாறை ரூ. 600, இறால் ரூ. 500, கிழங்கா ரூ. 500, ஷீலா ரூ. 600 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

பைபர் படகுகளில் பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் இன்று அதிகாலை முதல் கூட்டம் நெரிசலாக காணப்பட்டது விலையையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர்.

இதேபோன்று திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வளர்ப்பு மீன்களான கட்லாமீன் , கெண்டை மீன், ஜிலேபி, வளர்ப்பு இறால் ,உள்ளிட்ட வளர்ப்பு மீன்களின் விற்பனையும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது ஒரு சிலர் அந்த மீன்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்