< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
குமரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
|8 March 2023 3:28 AM IST
குமரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
வட மாநிலத்தவர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. குமரி மாவட்டத்தில் ராஜஸ்தான், பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். அதிலும் நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், மீனாட்சிகார்டன் பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்களது குடும்பத்தினரோடு நேற்று ஹோலி பண்டிகையை, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் வண்ண பொடிகளை முகத்தில் பூசியும், வண்ண பொடிகளை தண்ணீரில் கலந்து ஒருவர் மீது மற்றவர் ஊற்றியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
--