< Back
மாநில செய்திகள்
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,500 கனஅடியாக அதிகரிப்பு

தினத்தந்தி
|
12 May 2023 12:30 AM IST

பென்னாகரம்:

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல், கேரட்டி, நாட்ராபாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது.

கண்காணிப்பு

இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்