< Back
மாநில செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு   நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தினத்தந்தி
|
18 Nov 2022 12:15 AM IST

பென்னாகரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வது நின்றது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

எனினும் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்