< Back
மாநில செய்திகள்
நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதிசுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தர்மபுரி
மாநில செய்திகள்

நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக குறைந்ததுஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதிசுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
26 Aug 2023 7:00 PM GMT

பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் 10 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட கலெக்டர் சாந்தி நீக்கி உத்தரவிட்டார். இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்