< Back
மாநில செய்திகள்
தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு:ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

தினத்தந்தி
|
25 Aug 2023 12:30 AM IST

பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. எனினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து அதிகரிக்கவும், குறைவதுமாக உள்ளதால் தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது நேற்று 9வது நாளாக நீடித்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்