< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
வீட்டில் தேசிய கொடி ஏற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் மரியாதை
|16 Aug 2023 4:00 AM IST
வீட்டில் தேசிய கொடி ஏற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் மரியாதை செலுத்தினாா்.
அம்மாபேட்டை
77-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரில் வசித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.