< Back
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி பதுக்கல்; 4 பேர் கைது
மதுரை
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கல்; 4 பேர் கைது

தினத்தந்தி
|
7 Nov 2022 12:43 AM IST

ரேஷன் அரிசி பதுக்கல்; 4 பேர் கைது


மதுரை மாநகரில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக அவ்வப்போது அதிரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சின்ன அனுப்பானடியில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது, 23 சாக்கு மூடைகளில் 575 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கிய, வண்டியூர் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் (வயது 33), காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24), பீகார் மாநிலத்தை சேர்ந்த மனிஷ் குமார் (23), சுதீர்குமார் (25) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்