< Back
மாநில செய்திகள்
வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை - செல்வப்பெருந்தகை
மாநில செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கை - செல்வப்பெருந்தகை

தினத்தந்தி
|
20 Feb 2024 2:34 PM IST

வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது ,

வரலாற்று சிறப்புமிக்க வேளாண்நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காயை அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கோரிக்கை.

நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் கொடுப்பது குறித்த விவசாயிகள் கோரிக்கைக்கு, நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாதம் தொடர்ந்து நடைபெறும். விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் முன் வைக்க உள்ளது.

மோடி அரசு வந்ததில் இருந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை.என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்