< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்
|13 Dec 2022 12:30 AM IST
மங்கலதேவி கண்ணகி கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளையினர் மனு கொடுத்தனர்.
தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை நேற்று கொடுத்தனர். அதில், கூடலூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பளியன்குடி அருகே வண்ணாத்திப் பாறை மலை மீது மங்கலதேவி கண்ணகி கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கண்ணகி கோவில் விழாவை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் கண்ணகி கோவிலில் வழிபாடு செய்ய பளியன்குடி, தெல்குடி வழியாக பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.