திருநெல்வேலி
இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உத்தரவுப்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தும் வகையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சீனிவாசன், விவசாய அணி மாவட்ட தலைவர் கருங்குளம் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்மண்டல தலைவர் ராஜ பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.
இதில் நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராம், மாநகர தலைவர் கண்ணன் மற்றும் பச்சையப்பன், சரவணன், பாக்கியசாமி, மகளிர் அணி தலைவி வள்ளி மயில், இளைஞர் அணி மாரிச்செல்வம், ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.