கடலூர்
பண்ருட்டியில்இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகை அரங்கநாதர் பெருமாள் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டஇந்து மக்கள் கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பண்ருட்டியில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சக்திவேல் வரவேற்றார். இந்து திருக்கோவில் சொத்து பாதுகாப்புக்குழு மாநில தலைவர் செல்வகுமார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கடலூர் மாவட்ட செயலாளர் செந்தில், அனைத்து திருக்கோவில் சொத்து பாதுகாப்புக்குழு அணி பிரிவு மாவட்ட தலைவர் சிவ சிவ நாகராஜ் சிவனடியார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சித்தர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் வீரமுத்து, பண்ருட்டி ஒன்றிய தொழிற்சங்க செயலாளர்கள் அருண், தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.