< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
இந்து மக்கள் கட்சி கூட்டம்
|8 March 2023 12:15 AM IST
ஆழ்வார்குறிச்சியில் இந்து மக்கள் கட்சி கூட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் இந்து மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கண்ணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகானந்தம், நெல்லை மாவட்ட தலைவர் உடையார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில், ஆழ்வார்குறிச்சியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும், ஆழ்வார்குறிச்சி பஸ் நிலையம் முன்பு இருந்த இடத்திற்கே மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீமன் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.