தூத்துக்குடி
இந்து முன்னணி கூட்டம்
|இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது.
உடன்குடி:
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அளவிலான இந்து முன்னணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் உடன்குடியில் நடந்தது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி தலைவர் செந்தில் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஆத்திசெல்வம், முத்துகுமார், பட்டுராஜன், முத்துலிங்கம், சித்திரைபெருமாள், விக்னேஷ் பாண்டியன், தங்கராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சதீஷ் கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
கூட்டத்தில், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தசரா குழுவினர் கிராமிய நடனக்குழுக்களை மட்டுமே பயன்படுத்த முன்வரவேண்டும். தசரா திருவிழாவையொட்டி திருச்செந்தூர் தொகுதி முழுவதும் வருகிற 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து முன்னணி பொறுப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.