< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அறநிலையத்துறையை கண்டித்துஇந்து முன்னணியினர் தெருமுனை பிரசாரம்
|17 July 2023 12:06 AM IST
அறநிலையத்துறையை கண்டித்துஇந்து முன்னணியினர் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
ஆலங்குடியில் 6 இடங்களில் இந்து முன்னணி சார்பில் அறநிலையத்துறையை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் தனுஷ், பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவாலயங்கள் சொத்து கிறிஸ்தவர்களுக்கு, மசூதி சொத்து முஸ்லிம்களுக்கு, இந்து சொத்து மட்டும் அரசுக்கா?, வருடத்திற்கு 5,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவது இந்துக்களின் கோவில் பணம். ஆனால் அரசோ வருடத்திற்கு 60 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் என்று பச்சையாக பொய் சொல்கிறது. இந்துக்களின் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு மதிப்பதே இல்லை. கோவில் சிலைகள் திருட்டு போவதையும் கண்டு கொள்வதே இல்லை என்று பல்வேறு கோரிக்கை குறித்து வலியுறுத்தினர்.