< Back
மாநில செய்திகள்
சாத்தான்குளத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

சாத்தான்குளத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை உடனே நிறைவேற்றப்பட வேண்டும். சேதமாகியுள்ள திம்மராஜபுரம் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். தாமிரபரணி நதியில் இருந்து 13ஆயிரம் 758 லட்சம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை வறட்சி பகுதிக்கு திருப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா தலைமை தாங்கினார். கடலை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் மற்றும் பலர ்கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்